இன்று ஓணம் திருநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.எம்.ஆர்.புரொடக்ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் ‘ராஜாராணி’ படத்தில் கூட ஓணம் திருவிழாவை மையமாக வைத்து,குழுவினரோடு சேர்ந்து நயன்தாரா நடனம் ஆடும் பாடல் ஒன்றும் படமாக்கப்பட்டு உள்ளதாம்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், சந்தானம் மற்றும் நஸ்ரியா என நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கிறது. எல்லோரையும் கவரக்கூடிய வகையில் இனிமையான பாடல்கள், மற்றும் நெஞ்சை நிறையவைக்கும் இசையுடன் இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசைப்படமாக ராஜாராணி இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இயக்குனர் அட்லீ. இந்தப்படம் வரும் செப்-27ஆம் தேதி ரிலீஸாகிறது.