’ரகளபுரம்’ ரிலீஸ் பரபரப்பில் இருந்த கருணாஸை சந்தித்துப் பேசினோம். “படம் ரிலீஸுக்கு முன்னவே ’ஒபாமாவும் இங்கேதாண்டா..ஒசாமாவும் இங்கேதாண்டா’ ’பாட்டு ஹிட்டாகிடுச்சு. அதனால படத்தை தெலுங்கில் ரிலீஸ் பண்ண கேட்டு வந்திருக்காங்க. 30 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண வாய்ப்பிருக்கு. இதுக்கு இடையில அடுத்த படத்துக்கும் கதை ரெடியாகியிருக்கு. தெலுங்கில் ’ஒபாமா’ பாட்டு பெரிய ஹிட்டாகும்னு நம்பிக்கை இருக்கு.”