தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இவருக்கு இப்போது கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹீரோயின் கேரக்டர் இல்லையென்றாலும் இவருக்கு கதையில் திருப்பம் ஏற்படுத்தும்படியான மாறுபட்ட கேரக்டராம்.
’ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெற்றிக்குப் பின்னாடி டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கி வரும் படம் இது. இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிறார்கள். சந்தானம் படம் முழுவதும் வரும் நகைச்சுவை கேரக்டரில் நடிக்கிறார்.
தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் கார்த்தியுடன் நடிக்க முதலில் பாவனாவை அழைத்தார்களாம். ஆனால் அவர் பிஸியாக இருக்கவே அந்த வாய்ப்பு இப்போது ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்திருக்கிறது.