பூஜைக்கு கிடைத்தது ‘U/A’ சான்றிதழ்..!

89

 

இயக்குனர் ஹரியின் படங்கள் எப்போதுமே கமர்சியலானவை தான். ஆனால்  முகம் சுழிக்காத வகையில் அனைவரும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க கூடியவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தற்போது விஷாலுடன் அவர் இரண்டாம் முறையாக இணைந்திருக்கும் ‘பூஜை’ மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுமா என்ன? இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

விஷால், ஸ்ருதிஹாசன் ஸ்வீட் ஜோடி, மொட்டைத்தலை போலீஸ் அதிகாரியாக சத்யராஜ், மேலும் ராதிகா, கௌசல்யா, சித்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உண்டு. விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப்படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. தீபாவளி பட்டாசாக அதிரடியாக ரிலீஸ் ஆகிறது ‘பூஜை’.

Comments are closed.