பூஜாவை ஏமாற்றிய ஜான் விஜய்

91

’விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ மீன் என தன் சொந்த பணத்தில் வாங்கி வரச்செய்து யூனிட்டிற்கு சமைத்துப் போட்டிருக்கிறார்.

இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டவர் பூஜா. இது பற்றி ஜான் விஜய், “நான் ஓரம்போ படத்திற்குப் பிறகு நடிச்சு தள்ளியிருக்குற படம் விடியும் முன் படம்தான். படத்துல நான் ரொம்ப கெட்டவன். ரெட் ஹில்ஸ், பக்கத்துல தான் அந்த விருந்து நடந்தது. இதுல என்ன சோகம்னா நான் நல்லா சமைக்கத் தெரிஞ்சவன். அந்த டேஸ்ட்ல நண்பர்கள் நல்லா சாப்பிட்டு ஏப்பம் விட்ட பிறகு பூஜா வந்தாங்க. அவங்களுக்கு எதுவுமே மிச்சம் இல்லை. இதனால எமாந்து போயிட்டாங்க. விடியும் முன் படம் மாதிரியான படங்களை மக்கள் ஏத்துக்கனும் அப்பதான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் வரும்.”என்றார்

Leave A Reply

Your email address will not be published.