இருபது பிளான் பண்ணி ஒன்பதில் முடித்தார் ஷங்கர்..!

85

‘ஐ’ படத்தை பற்றிய சிறப்புகள் பற்றியெல்லாம் சொல்லி, திரும்பவும் உங்களை போரடிக்கப்போவதில்லை. ஆனால் ஷங்கர் தனது படத்தின் ஷூட்டிங்கை முடித்த விஷயத்தையும் அதற்காக ‘ஐ’ படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விக்ரம் விருந்து கொடுத்த கதையும் உங்களுக்கு புதிதுதானே..!

அப்ப கேளுங்க.. ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி  இருந்தது. பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டில் வைத்து சமீபத்தில் தான் அந்த பாடலை படமாக்கினார். இந்தப்பாடலை இருபது நாட்களில் படமாக்க பிளான் பண்ணிய ஷங்கர், ஆச்சர்யமாக ஒன்பதே நாட்களில் முடித்துவிட்டாராம்.

கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 250 நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்த சந்தோஷத்தை கொண்டாட ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் விக்ரம். இதில் ஷங்கர், எமி ஜாக்சன், ஷங்கரின் உதவி இயக்குனர்கள் உட்பட படக்குழுவினரில் முக்கியமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனராம்.

Comments are closed.