‘பீட்சா-2’ வெற்றிபெற கார்த்திக் சுப்பராஜ் வாழ்த்து

87

அமைதியாக வெளிவந்து அதிரடியாய் ஹிட்டடித்த ‘பீட்சா’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கிவரும் படம் தான் ஜிகர்தண்டா. மதுரை பின்னணியில் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் கவனிக்கத்தக்கவராக மாறியுள்ள சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ்த் திரையுலகில் அதிக கவனம் செலுத்திவரும் சித்தார்த், இந்தப்படம் தனக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தரும் என்று நம்புகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ள ஜிகர்தண்டா வரும் 2014 ஜனவரியில் ரிலீஸாகும் என்கிறார் சுப்பராஜ்.

இவர் இயக்கியிருந்த ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பீட்சா-2 தி வில்லா’ வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. தன்னை அறிமுகப்படுத்திய சி.வி.குமார் தயாரிக்கும் படம் என்பதால் இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். மேலும் தனக்கு ஆதரவு அளித்த்து போலவே, இந்தப்படத்தை இயக்கியிருக்கும் தீபன் சக்கரவர்த்திக்கு ஆதரவு அளித்த்தற்கும் தயாரிப்பாளருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.