யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஏன் கார்த்தியே எதிர்பார்க்கவில்லை ‘மெட்ராஸ்’ இவ்வளவு மாஸ் ஹிட் ஆகும் என்று. இன்று நடைபெற்ற ‘மெட்ராஸ்’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய கார்த்தியின் பேச்சிலும் அது வெளிப்பட்டது. அவ்வளவு குஷியாக இருக்கிறார் மனிதர்.
கார்த்தி பேசும்போது, “நல்ல படங்களில் நடிக்கவேண்டுமேன்றுதான் நான் மெனக்கெடுகிறேன்… ஆனால் சில நேரங்களில் அது பொய்த்துவிடுகிறது. ஆனால் தற்போது ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றி இனி நல்ல படங்களில் நடிப்பது மட்டுமே என் வேலை என்பதை அழுத்தமாக உணர்த்தி இருக்கிறது.
இயக்குனர் ரஞ்சித்தால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. என்னுடன் நடித்தவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏரியாவில் பெரிய ஆள்தான். அவர்களுடன் பழகியதில் அடுத்த ஐந்து வருஷத்துக்கான நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என்று கூறியவர் தற்போது தான் நடித்துவரும் ‘கொம்பன்’ படமும் இதேபோல ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்றும் கூறினார்.
Comments are closed.