நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை ‘சாதனையாளர்’ ஆக்கி சமுதாயத்தில் ‘நிமிர்’ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரேஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர் படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா, சாதாரண குடும்பத்தை சேர்ந்த இந்த ரஜினி கிருஷ்ணாவிற்கு, அவர் ரேஸிங் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை தந்து ஊக்குவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நம்நாட்டில், ரஜினி கிருஷ்ணன் போன்ற மிகப்பெரிய திறமைசாலிகளை ஊக்குவித்து உதவி செய்திருப்பது மற்ற விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவதில் இந்த விஷயம் ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே சந்தோஷ் குருவில்லாவின் இந்த செயல் பலதரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது.
Comments are closed.