தமிழில் ராணுவத்தை மையமாக வைத்து ஆக்ஷன் கதைகளை எழுதுவதில் வல்லவர்கள் இரட்டை எழுத்தளர்களான சுபா தான். அதேபோல் தான் மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக மைந்தன.
கடைசியாக மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய ‘கர்மயோதா’ படம் மட்டும் இதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. தற்போது பிருத்விராஜை வைத்து மீண்டும் ராணுவ பின்னணியில் ‘பிக்கெட் 43’ என்ற படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மேஜர் ரவி.
இந்தப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடிக்க ஒரு காஷ்மீரப் பெண்ணை தேடிவருவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள மேஜர் ரவி, “எங்களது படத்துக்கு பாகிஸ்தானி சாயலில் உள்ள கேரளப்பெண் தான் வேண்டும் என தேடிக்கொண்டு இருக்கிறோம்.. ஆனால் இன்னும் கிடைத்தபாடில்லை” என கூறியுள்ளார்