நேரம் பட நாயகி நஸ்ரியாவுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான். இல்லையென்றால் முன்னணி நடிகர்கள் அவருடன் போட்டிபோட்டுக்கொண்டு நடிக்க முன்வந்தும் கூட, அவரால் கால்ஷீட் கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்குமா?
ஆனால் விஷயம் இதுவல்ல. மலையாள சூப்பர்ஸ்டாரையும் மெகாஸ்டாரையும் ஓவர்டேக் செய்திருக்கிறார் நஸ்ரியா. இது சம்பள விஷயத்தில் அல்ல… ஃபேஸ்ஃபுக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் தான் இந்த சாதனையை செய்திருக்கிறார் நஸ்ரியா.
ஃபேஸ்புக்கில் மோகன்லாலுக்கு 10லட்சமும், மம்முட்டிக்கு 8லட்சமும் என பின்தொடரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நஸ்ரியாவை 15லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக்கில் பின் தொடர்கிறார்கள். ஆறுதலான செய்தியாக விரைவில் மம்முட்டியின் பிறந்தநாள் வருவதையொட்டி அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 42ஆயிரமும், மோகன்லாலுக்கு 56ஆயிரமும்எண்ணிக்கையில் கூடியிருக்கிறதாம்.