தனக்கு பதிலாக ’டூப் போட்டு க்ளாமர் காட்சியை எடுத்து விட்டார்.’ இயக்குனர் சற்குணம் மீது குற்றம் சாட்டிய நஸ்ரியா இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இன்று காலை (8.10.13) 12 மணியளவில் அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வர இருப்பதால் பரபரப்புடன் பத்திரிகையாளர்கள் குவிய ஆரம்பித்திருக்கிறார்கள்.