நாம் யூகத்தின் அடிப்படையில் கணித்த செய்தி இப்போது உண்மையாகவே ஆகிவிட்டது. பாண்டிராஜ் டைரக்ஷனில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. இதை பாண்டிராஜே உறுதிசெய்திருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இதில் ‘மயிலா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ‘வல்லவன்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.
சிம்புவும் நயன்தாராவும் காதலித்தது, அதன்பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தது, தொடர்ந்து பிரபுதேவா-நயன்தாரா காதல், அதன் முறிவு, தற்போது சிம்பு-ஹன்ஷிகா காதல், அதில் ஊசலாடும் சிக்கல் என எதையும் இந்தச்செய்தியோடு சேர்த்துப் பார்க்காமல் சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் இந்த செய்தியை நாம் அணுகுவோமே. மற்றபடி எது நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.