‘ராஜாராணி’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம்தான் ‘நவீன சரஸ்வதி சபதம்’. தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வெளிவந்த சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் இது பழைய சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் அல்ல. இது ‘நவீன சரஸ்வதி சபதம்’.
போராளி படத்தில் நடித்த நிவேதிதா தாமஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், சத்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
கல்பாத்தி அகோரம் தயாரித்த இந்த படத்தை டைரக்டர் கே.சந்துரு எழுதி இயக்கியுள்ளார். இவர் டைரக்டர் சி.எஸ்.அமுதன் மற்றும் வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியவர், படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.