எத்தனை இளம் முன்னணி ஹீரோக்கள் வலம் வந்தாலும் நாகர்ஜூனாவுக்கென்று அசைக்கமுடியாத ஒரு தனி இடம் தெலுங்கு சினிமாவில் உண்டு. 1986ல் ஒரு நடிகராக ஆரம்பித்த அவரது திரையுலக பயணம் கிட்டத்தட்ட 27 வருடங்களாக ஒரே சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவருக்கு போட்டி என்றால் அது அவரே தான்.
ஆக்ஷன், காமெடியில் புகுந்து விளையாடும் நாகார்ஜூனா அவ்வப்போது அன்னமய்யா, ஷீர்டிசாய் என ஆன்மிகப்படங்களிலும் நடித்து ஆச்சர்ய முகம் காட்டுவார். தற்போது பாய் என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துவரும் நாகர்ஜூனாவுக்கு இன்று 54வது பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற நமது behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.