இயக்குனர் மு.களஞ்சியத்தின் பாசறையில் இருந்து அவரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய வேலுதாஸ் என்பவர் ‘ஆக்கம்’ படத்தின் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். கிராமத்தினரின் ஆழமான உணர்வுகளை எப்படி பாரதிராஜா திரையில் காட்டினாரோ, அதே வகையில் ஒரு நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் இந்தப்படத்தில் சொல்கிறாரம் வேலுதாஸ்.
இந்தப்படத்திற்கு இசையமைப்பது ஸ்ரீகாந்த் தேவா. இவர் இயக்குனர் வேலுதாஸின் நெருங்கிய நண்பரும் கூட. இந்தப்படத்தில் வாத்தியக்கருவிகளையே பயன்படுத்தாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
வடசென்னை தான் படத்தின் பிரதான கதைக்களம். வில்லன் நடிகர் ரஞ்சித் இந்தப்படத்தில் தெலுங்கு மொழி பேசும் வடசென்னை தாதாவாக நடிக்கிறார். மேலும் பத்திரிகையாளர் ‘தினகரன்’ தேவராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.
Comments are closed.