சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறார் மு.களஞ்சியம்.!

88


பூமணி, மிட்டாமிராசு உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் மு.களஞ்சியம், தான் இயக்கிய ‘கருங்காலி’ படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். அவர் இயக்கிய ‘ஊர்சுற்றி புராணம்’ அஞ்சலியின் பிரச்சனையால் பாதியில் நிற்பதுடன், அதுகுறித்து வழக்கும் நடந்துவருகிறது. அதனால் டைரக்‌ஷனை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மு.களஞ்சியம்.

அந்தவகையில் தற்போது ‘களவு தொழிற்சாலை’ என்ற படத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறார் மு.களஞ்சியம். படத்தை டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்குகிறார். இதுவரை வெளிவராத கடத்தலின் இன்னொரு நிழல் உலகத்தையும் அதன் சர்வதேச தொடர்புகளையும் மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா(இவன் வேற மாதிரி) இருவரும் கதாநாயகர்களாக நடிக்க கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்த ஷியாம் பெஞ்சமின் என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்திற்காக கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கிட்டதட்ட 200அடி நீளத்திற்கு பழமை வாய்ந்த ஒரு செயற்கையான சுரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. கதையின் முக்கிய பகுதி இந்த சுரங்கத்தின் உள்ளேதான் நடைபெறுகிறது. ஜூன் வெளியீடாக வர தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ‘களவு தொழிற்சாலை’.

Comments are closed.