மோகன்லால் படத்தில் மஞ்சு வாரியர் இல்லை

133

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரஞ்சித். கடந்த வருடம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த, கேரள அரசாங்கத்தால் சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என பாராட்டப்பட்ட ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் ரஞ்சித். படத்தின் பெயர் ‘மேன் ஃப்ரைடே’.

இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்றுதான் இவ்வளவு நாளாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது இந்தப்படத்தில் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல இந்தப்படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜும் இணைந்து நடிக்கிறார் என்ற செய்தியும் முன்பு வெளியானது. இதை தனது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டது கூட மோகன்லால் தான். ஆனால் இப்போது அவரும் இந்தப்படத்தில் இல்லை என்கிறார்கள்.

காரணம் என்னவென்று விசாரித்ததில், இந்தப்படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்கவைக்க நினைத்தது உண்மைதான். ஆனால் படத்தில் அவர்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் இல்லை. அதுதான் காரணம். மற்றபடி படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் துவங்கும். இதுகுறித்த அறிவிப்பை மோகன்லாலே அவரது சமூக வலைதளத்தில் விரைவில் வெளியிடுவார் என்கிறார்கள் படக்குழுவினர்.

Leave A Reply

Your email address will not be published.