1982ல் நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அறிமுகமான மீனா,வளர்ந்து கதாநாயகியாக மாறி கிட்டத்தட்ட இன்றுவரை தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். 1984ல் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் ஒரு குழந்தை நட்சத்திரமாக மீனாவை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது என்றால், 1991ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படம் அவருக்கு கதாநாயகி அந்தஸ்தை தந்தது.
தென்னிந்திய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் மீனா ஒருவராகத்தான் இருப்பார். ரஜினிக்கு மகளாக நடித்து அவருக்கே ஜோடியாக நடித்த மீனாவின் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. இன்று பிறந்தநாள் காணும் மீனா, வளம் பல பெற்று நலமுடன் வாழ behind frames தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.