மனதில் மாயம் செய்தாய் படத்தின் சிங்கிள் ட்ராக்கை இன்று வெளியிடுகிறார்கள். பிரபல சாக்ஸ்போன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த் கத்ரி தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ், திஷா பாண்டே ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மைனா புகழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சுரேஷ் பி.குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஃபுல் ஹவுஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது.