ராஞ்சனா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த துறுதுறு பொண்ணான சோனம் கபூர் அதன்பின் நடித்த பாக் மில்கா பாக் படமும் சூப்பர்ஹிட். இந்தியோடு நின்றுவிடாமல் தமிழ், தெலுங்கிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் சோனம் கபூர். ஆனால் சோனம்கபூருக்கு இந்தியை தவிர மற்ற மொழிகள் எதுவும் தெரியாததால் தமிழ், தெலுங்கில் நடிக்க தயக்கம் காட்டிவந்தார். தன்னைத்தேடி வந்த வாய்ப்புகளையும் மறுத்து வந்தார். ஆனால் இப்போது தெலுங்கில் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.