விஜயகாந்த் மகன் படத்தின் புரட்சிப்பாடல் வெளியானது..!

103

madura veeran single

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மதுரைவீரன்’.. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

இந்தப்படத்தின் “என்ன நடக்குது நாட்டுல“ என்கிற முதல் சிங்கிள் பாடல் இன்று காலை 11 மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பல புரட்சிகரமான வரிகளோடு உருவாகியுள்ள இந்தப்பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது .

Comments are closed.