சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை ஜாக்பாட் என்று சொன்னால், கொடைக்கானலுக்குச் சென்று அவருடன் டூயட் பாடுவதை பம்பர் பிரைஸ் என்றுதான் சொல்லவேண்டும். எல்லாம் மான் கராத்தே படத்துக்காகத்தான். இதை முடித்துவிட்டு அடுத்த ஷெட்யூலுக்காக 45 நாட்கள் பெங்களூரில் முகாமிட இருக்கிறது இந்த ஜோடி.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனுக்கு சூப்ப்ர்ஹிட் பாடல்களை தந்த அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நாசரும், ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகாதஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்.