தமிழ் சினிமாவில் எல்லா கலைஞர்களுக்கும் சங்கம் இருக்கிறது ஆனால் கவிஞர்களுக்கென்று எந்தவித அமைப்பும் இல்லாமல் இருந்தது.கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் பாடலாசிரியர் தமிழமுதன் தலைமையில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம் என்ற அமைப்பைத் துவங்கி வரும் 6.8.13 அன்று ஓராண்டை பூர்த்தி செய்திருக்கிறார்கள். இதை வெற்றி விழாவாக கொண்டாட நினைத்திருந்த நேரத்தில் தான் பெருங்கவிஞர் வாலி மரணம் நிகழ்ந்து விட்டது.எனவே இந்த நாளில் வாலியின் திரு உருவப்படத்தை திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்போகிறார்கள்.
வாலியே தலைமையேற்று நடத்தித்தருவதாக சொல்லியிருந்த இந்த விழாவை தலைமையேற்று நடத்தித்தரப்போகிறவர் புலவர் புலமைப்பித்தன்.இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும் விழாவில் பெப்சி சார்பாக அமீர்,இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்,இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் உட்பட திரையுலகினர் கலந்து கொள்ளப்போகிறார்கள்.
இது பற்றி பாடலாசிரியர்கள் சங்க பொதுசெயலாளர் கவிஞர் இளையகம்பனிடம் பேசியபோது,”இது வரைக்கும் சங்கத்தில் 150 பாடலாசிரியர்கள் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.முன்னனியில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களையும் சேர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.இந்த சங்கத்தை பெப்சியுடன் இணைக்க முறைப்படி கடிதம் கொடுத்திருக்கிறோம்.விரைவில் இணைவோம்.”என்று கூறினார்.
சில வ்ருடங்க்ளுக்கு முன்பு கவிஞர் வாலி அவர்களே இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்பினார்.அவரின் ஆசையை அவருடைய கவிதை பிள்ளைகள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.