காஜல் அகர்வால் தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் அவர் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்துவிட்டது. ஜில்லாவும் பொங்கலுக்கு வெளியாவதால் அக்டோபருக்குள் படப்படிப்பே முடிந்துவிடும். தெலுங்கில் சமீபத்தில்தான் ஜூனியர் என்.டிஆருடன் காஜல் அகர்வால் நடித்த பாட்ஷா ரிலீஸானது. ராம்சரணுடன் நடித்த எவடு படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. வேறு எந்த தெலுங்குப்படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை.
இப்போது எழுந்திருக்கும் கேள்வியெல்லாம் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் படத்திற்கு அவர் கால்ஷீட் தர மறுத்தது ஏன் என்பதுதான். அவர் ஒன்றரை கோடி கேட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் சமந்தா, அமலாபால் என பந்தயத்தில் போட்டி ஆட்கள் நிறைய இருக்கும்பொழுது காஜல் மட்டும் அதிக சம்பளம் கேட்டு அடம்பிடிப்பாரா என்ன? காஜல் அகர்வாலுக்கு திருமண எண்ணம் வந்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்றும் அதனாலேயே படங்களில் ஒப்புக்கொள்ளாமல் தவிர்க்கிறார் என்றும் கூறுகிறார்கள். உண்மை என்ன என்பது வெளிவரத்தானே போகிறது.