விஜய், மோகன்லால் நடித்துவரும் ஜில்லா படத்திற்கான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக முழுவதும் மரத்தால் ஆன பிரம்மாணடமான செட் அமைத்து இந்த சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள். இதை முடித்துவிட்டு இரண்டு பாடல் காட்சிகளுக்காக பல்கேரியா நாட்டுக்கு கிளம்புகிறார்கள் விஜய்யும் காஜல் அகர்வாலும்.
பல்கேரியாவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என படத்தின் இயக்குனர் ஆர்.டி.நேசனிடம் கேட்டால், “இன்னும் நமது தமிழ்சினிமாவில் காட்டப்படாத பல அற்புதமான பகுதிகள் பல்கேரியாவில் இருக்கின்றன. நாங்கள் பாடல் காட்சிகளுக்காக ஒன்பது விதமான இடங்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்” என்கிறார்.
ஜில்லா படக்குழுவினர் இந்தப்படத்திற்காக வெளிநாடு கிளம்புவது இதுதான் முதல்முறை. இது குடும்பப்பாங்கான படம் என்பதால் படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையிலேயே படமாக்கியிருக்கிறார்களாம்.