திரையுலகில் தனக்கு திறக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அதிர்ஷ்ட கதவு என்பதால் ‘ஜில்லா’ படத்தை பார்த்து பார்த்து பக்குவமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.நேசன். விஜய், மோகன்லால் இருவருக்கும் சமமான காட்சிகள், யாரையும் தாக்காத வசனங்கள் என ஒவ்வொரு ஃபிரேமிலும் கவனம் செலுத்தி விஜய், மோகன்லால், மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உட்பட அனைவரிடமும் பாராட்டுக்களை வாங்கியுள்ளார் நேசன்.
இந்நிலையில் முழுப்படமும் முடிந்து, சென்சார் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த மகிழ்ச்சியில் ஜனவரி-10ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.