காமெடி 60%, ஆக்ஷன் 38%, இவற்றுடன் போனால் போகிறதென்று செண்ட்மெண்ட் 2% என அனத்தையும் சரிவிகித்த்தில் கலந்து கமர்ஷியல் குருமா வைப்பதில் கெட்டிக்காரர் டைரக்டர் சுராஜ். இப்போதும் கூட எந்த சேனலை திருப்பினாலும் தலைநகரம், மருதமலை, படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன் என இவரது படங்களின் நகைச்சுவை காட்சிகள் இடம்பெறாத நாள் இருக்காது.
படம் வெற்றி பெறுகிறதா, தோற்கிறதா என்பதற்கு அப்பாற்பட்டு இவரது படத்தில் நடிக்கும்போது ஒரு நல்ல நகைச்சுவை கதாநாயகனாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என பல ஹீரோக்கள் நம்புகின்றனர். அந்த பட்டியலில் ஜெயம் ரவியும் ஒருவர். சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என விரும்புகிறார் ஜெயம் ரவி.
ஆதிபகவன், நிமிர்ந்து நில் என தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களிலேயே நடித்துவரும் ஜெயம் ரவிக்கு சுராஜின் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்ததில் வியப்பேதும் இல்லை. இப்போது பேச்சுவார்த்தை அளவில் இருப்பதாக சொல்லப்படும் இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
Comments are closed.