ஜெய் ஆகாஷுக்கு திருப்பம் தருமா ‘லவ் இன் மலேசியா’?

83

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஃபீல்டில் இருந்தாலும் இன்னும் ஒரு ஹிட் கூட தரவில்லையே என்ற ஏக்கம் நடிகர் ஜெய் ஆகாஷுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அதனால் சமீபகாலமாக அவரே இயக்குனராகவும் மாறி சில படங்களையும் இயக்கினார். அந்தவகையில் தற்போது அவர் இயக்கியுள்ள ‘லவ் இன் மலேசியா’ படம் அவருக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுக்கும் என நம்புகிறார்.

மலேசிய சுதந்திர தினமான ஆகஸ்டு 31 அன்று தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து சீர்குலைக்கத் திட்டமிடுகின்றனர். மலேசிய அரசு ஜெய் ஆகாஷை ஆண்டி டெரரிஸ்ட் டீமுக்கு தலைவராக்கி அனுப்புகிறது. ஜெய் ஆகாஷும் வெற்றிகரமாக தீவிரவாதிகளை அழித்து அவர்களது சதித்திட்டத்தை முறியடிக்கிறார். இறுதியில் அவர் இந்தியன் போலீஸ் ஆஃபிசர் என்று தெரியவர மலேசிய மக்கள் அவரை ஹீரோவாக்குகிறார்கள். கூடவே கதாநாயகி சங்கீதா மனதிலும் இடம்பிடிக்கிறார். இதுதான் ‘லவ் இன் மலேசியா’ படத்தின் ஆக்‌ஷனும் காதலும் கலந்த கதை.

இப்படத்தில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள மலேசிய பார்லிமெண்ட் அருகே தொடங்கும் முதல் சண்டைக்காட்சி தொடங்கி 6 சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற நிலையில் இந்தப்படம் ஜனவரி 2014 ல் திரைக்கு வருகிறது. விரைவில் பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.