நடிகை சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்.. இந்த செய்தியை யார் கொளுத்திப்போட்டார்களோ தெரியவில்லை.. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை என்று அறிவித்திருக்கிறார் அவரது கணவர் பிரசன்னா.
நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் பிரசன்னா சினிமாவில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சினேகா. அதுமட்டுமில்லாமல் விளம்பரம், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்து வந்தார்.
இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள பிரசன்னா, இந்த வதந்திக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “பத்திரிகை மற்றும் சில ஊடகங்களில் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் தகவலில் உண்மையில்லை. சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் மூன்று மொழிகளில் உருவாகிவரும் ‘உன் சமயல் அறையில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஒரு தெலுங்குப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.
அதேபோல நானும் தற்போது, ‘கல்யாண சமையல் சாதம்’ மற்றும் ‘புலிவால்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நாங்கள் குழந்தை பிறப்பை இப்போதைக்கு தள்ளிவைத்திருக்கிறோம். அப்படி ஒரு சுபச்செய்தி இருந்தால் எங்கள்மீது எப்போதும் அன்பு காட்டிவரும் பத்திரிக்கையாளர்களான உங்களை அழைத்துத்தான் முதலில் பகிர்ந்துகொள்வோம்” என ட்விட்டர் இணையதளத்தின் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்.