இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பித்துவிட்டது. செப்-21 முதல் 24 வரை சென்னை நேரு உள் விளையட்டு அரங்கில் இந்த விழா நடைபெற இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, காலம் கடந்தும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஆயிரத்தில் ஒருவன், செம்மீன், மாயாபஜார், சத்ய ஹரிச்சந்திரா என தென்னிந்திய மொழிகளில் சாதனை படைத்த சில படங்கள் இன்றுமுதல் இலவசமாக மக்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்படுகின்றன.
இதற்காக சத்யம், உட்லண்ட்ஸ். 4 ஃப்ரேம் தியேட்டர்களில் காலை 11.30 மணிக்கும் அபிராமி தியேட்டரில் மாலை 6.30 மணிக்கும் இலவச சிறப்புக் காட்சிகள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. இன்றிலிருந்து 24ஆம் தேதி வரை இந்த சிறப்பு காட்சிகள் நடைபெறும். இதற்கான ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்குகிறது என இந்த விழாக்குழுவின் தலைவர் கல்யாணம் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் சுரேஷ் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.