இனம்’ படத்திற்கு குவியுது பாராட்டு மழை..!

91


இன்று சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள ‘இனம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இலங்கையில் நம் தொப்புள்கொடி உறவுகள் எந்தநிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ரத்தமும் கண்ணீருமாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் சிவன். இந்தப்படத்தை பார்ப்பதற்கு திரையுலக பிரபலங்களுக்காக ஒரு சிறப்புக்காட்சிக்கு ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த்து.. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் விவரிக்க இயலாத மனநிலையில் இருந்தனர்.

“இப்படத்தில் வரும் கருணாஸ் பாத்திரம் மிக அற்புதமாக உள்ளது. இங்கே சரியான புரிதல் இல்லாமல் அறிவில்லாமல் பேசுகிற பல முட்டாள்களுக்குப் பதிலாக அந்த பாத்திரம் இருக்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ‘என் குடும்பத்தை காப்பாற்ற நான் எதையும் செய்வேன்’ என்கிற அந்த வசனம் தான் இலங்கையில் தமிழர்களின் போராட்டம். சந்தோஷ்சிவன் என் இனம் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு சதவிகிதம் தான் காட்டியிருக்கிறார். அதுவே இவ்வளவு கொடுமையாக தெரிகிறது. படத்தில் சொல்லப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன” என பாராட்டுதலோடு தனது ஆதங்கத்தையும் பதிவு செய்தார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.

‘அஞ்சான்’ படம் எடுப்பது என்று முடிவானபோது அந்தச் சூழலில் ஒரு படம் எடுத்து இருக்கிறேன் என்று இதைக் காட்டினார் சந்தோஷ் சிவன். பிடித்து இருந்ததால் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுவது என்று முடிவு செய்தோம். இதில் வேற எந்த வியாபாரக் கணக்கும் இல்லை. படத்தின் மூலம் இரண்டு சொட்டு கண்ணீர் போதும் அதுதான் எதிர்பார்ப்பு கணக்கு” என்று நெகிழ்கிறார் இயக்குனர் லிங்குசாமி..

“இனம்” ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு. இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. சாதாரண கண் கொண்டு இப்படத்தை பார்க்க வேண்டாம். நெஞ்சில் ஏந்திப் பாருங்கள்.” –இது பாலாஜி சக்திவேலின் பாராட்டு மழை.

“இலங்கை தமிழர்களின் பிரச்சனையை சொல்ல வேண்டும், அவர்களின் கஷ்டங்களை படமாக்க வேண்டும் என்கிற மன அழுத்தம் சந்தோஷ் சிவனுக்கு உண்டு. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இப்படம். அவர் உண்மையிலேயே ஜீனியஸ்” என்று புகழ்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இந்த படத்தை அரசியல் படமென்று யாரும் சிறுமைப் படுத்திவிட வேண்டாம். கசப்பான உண்மைகளை உலகமே கைகட்டி நிற்கும் இந்த சூழலில் எடுத்திருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய உணர்ச்சிகரமான முக்கியமான நல்ல படம் “இனம்” என்கிறார் சித்தார்த்.

இதுதவிர கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் வசந்தபாலன், எம்.ராஜேஸ் மற்றும் யு.டி.வி தனஞ்செயன் உள்ளிட்ட பலர் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை சந்தோஷ் சிவனுக்கு தெரிவித்தனர்.

Comments are closed.