சின்னத்திரையில் வெளுத்து வாங்கும் இமான் அண்ணாச்சிக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகின்றன. ஒரு படத்திற்காக டப்பிங் வந்திருந்தவரை சந்தித்து பேசினோம்.
சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவீங்க போல.
எல்லாம் ரசிகர்களோட தயவு தான். கிட்ட தட்ட 13 படங்கள்ல நடிக்கிறேன். டைரக்டர் செல்வபாரதி தான் ’காதலைத் தவிர வேறில்லை’ என்ற படத்தின் மூலம் முதன் முதல்ல என்னை முழு நேர காமெடியனா அறிமுகம் செய்யப்போறார். டியூசன் மாஸ்டரா வர்றேன். சின்னக் குழந்தைகள் கிட்ட மாட்டிகிட்டு எப்படி திண்டாடுறேன்னு காட்டியிருக்கிறார்.
வேல்முருகன் இயக்கத்தில ’எவன்டி உன்ன பெத்தான்’ இதிலும் முழு நீள காமெடி பண்றேன். ’குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்’ படத்தின் ஹீரோ ராமகிருஷ்ணனோட ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’, அப்புறம் நய்யாண்டி, எஸ்.பி ராஜ்குமாரோட ’பட்டயகிளப்பு பாண்டியா’ படத்துலயும்,’வேல்முருகன் போர்வெல்ஸ்’, அமீர் ஹீரோவாக நடிக்கிற ’பேரன்பு கொண்ட பெரியோர்களே’, நாகேந்திரன் இயக்கத்துல ‘நீங்களாம் நல்லா வருவீங்கடா’ னு ஒரு படம், காது, ரெண்டாவது படம், விடியும் வரை பேசு இப்படி இன்னும் சில படங்கள் பேரு வைக்காம ஷீட்டிங் போயிட்டிருக்கு.” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அண்ணாச்சி.