”தயாரிப்பாளர்களை தேடி நான் போவதில்லை” – பார்த்திபன்

75

பார்த்திபனின் புதிய படமான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் துவக்க விழாவை படு வித்தியாசமாக நடத்தி அசத்தினார். இதில் பத்திரிகையாளர்களே சிறப்பு விருந்தினர்களாக்கி அவர்கள் முன்பு படக்குழுவினரை அறிமுகப்படுத்தினார். “பாக்யராஜ் சாரை விட்டு வெளியே வரும்போதே நான் திமிரோடுதான் வந்தேன். அப்ப ஒரு படம் கூட நான் பண்ணல. அந்த நிலையிலும் நான் எந்த தயாரிப்பளர்களையும் தேடிப்போகல. எப்போவுமே வெற்றி பெற்ற பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தினவங்க புது தயாரிப்பாளர்களாதான் இருக்காங்க. இப்ப என்னையும் நம்பி ஒரு தயாரிப்பாளர் வந்திருக்கார். அவரை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அப்புறம் இந்த படத்தில் கதையே இல்லாமல் ஒரு கதை சொல்லியிருக்கேன். நிச்சயம் இது எல்லாருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.” என்றார். விழாவில் இதுவரை தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருந்து வந்தவர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் பரிசு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.