இணையத்தை திறந்து வைத்த இசைஞானி

132

இணையதள உலகில் புதிய வரவாக நமது behindframes.com ஆடி கிருத்திகையன்று அடியெடுத்து வைக்கிறது.அதுவும் யாருக்கும் கிடைக்காத பாக்யமாக பல கோடி இசை ரசிகர்கள் சேர்ந்த உருவமான இசைஞானி அவர்களின் இசைக்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டது.

எப்போதும் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்திற்கு 7 மணிக்கெல்லாம் வந்துவிடும் ராஜா சார் இன்றும் ’ஒரு ஊர்ல’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவிற்காக பரபரப்பாக இருந்தார்.பாடலை பாடி முடித்து வெளியே வந்தவுடன் நமக்காக நேரம் ஒதுக்கினார்.”போட்டோ நல்லபடியா வரணும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க.இதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்படுறீங்க.” என்று அக்கறையோடு பக்கத்திலிருந்தவர்களை தள்ளி நிற்க வைத்தார்.அதோடு “இந்த பிகைண்ட் ப்ரேம்ஸ் நல்லபடியாக வளர வாழ்த்துக்கள்.” என்று கை வைத்து மவுசை இயக்க ’ஜனனி ஜனனி’ என்ற தாய் மூகாம்பிகை படப்பாடல் ஒலிக்க நம் இணையதளத்தின் அதிகாரப் பூர்வ லோகோ இணையதள காற்றில் பறக்கத் தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.