“நான் தியாகியான்னு தெரியாது.. ஆனா துரோகி இல்ல..” – ‘கத்தி’ விழாவில் விஜய் உருக்கம்..!

49

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கத்தி’ இசைவெளியீட்டு விழா எந்தவித தடங்கலும் இன்றி இனிதே நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு எதிர்ப்பாளர்களிடம் இருந்து ஏதாவது அச்சுறுத்தல் வரலாம் என்பதாலேயே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் இறுதியாக பேசிய விஜய், “நாம் படம் எடுக்குறது சண்டைபோடுறதுக்கு இல்ல.. எல்லோரும் சண்டை, சச்சரவுகளை மறந்து சந்தோஷமா பார்த்து ரசிக்கிறதுக்குத்தான். நான் தியாகியா என்னன்னு எனக்கு தெரியல.. ஆனா நிச்சயமா நான் துரோகி இல்ல.. எந்த ஒரு மக்களுக்கும் ஆதரவாகவோ இல்ல எதிராகவோ நிச்சயமா இந்தப்படத்தை எடுக்கலை..

உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது இன்னும் தெளிவா ஆகிடும். ஆனா வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மை ஆகிடும்..” என கத்தி படத்தை இதுநாள்வரை சுழன்றடித்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உருக்கமாக பேசினார்.

Comments are closed.