மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளுமான நிஹாரிகா கோனிடேலா தற்போது தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்கிற படத்தில் தான் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்குகிறார்.
இந்தப்படம் குறித்து நிஹாரிகா பேசுகையில், “தமிழில் எனது முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. சிறந்த அணி , சிறப்பான கதை எனக்கு கிடைத்துள்ளது விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது அரிது. அவர்களுடன் பணிபுரிந்து ஒரு அருமையான அனுபவம். இப்படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல. எனது இந்த கதாபாத்திரம் இரண்டு பெயர்களில் வரும். ஏன் இரண்டு பெயர்கள் என்பதை படம் பார்க்கும் பொழுது நீங்களே அறிவீர்கள்” என சஸ்பென்ஸ் வைக்கிறார் நிஹாரிகா.
Comments are closed.