ஹேப்பி பர்த்டே ஷாம்..!

125

மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் அறிமுகம் தான் ஷாம். ‘12பி’ படம் மூலம் ஷாமை ஒரு நடிகனாக ஜீவா கண்டுபிடித்தார் என்றால் அவருக்குள் இருந்த ஒரு உண்மையான நடிகனை தனது ‘இயற்கை’ படம் மூலமாக வெளியே கொண்டுவந்தவர் எஸ்.பி.ஜனநாதன்.

தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக ஷாம் எந்த அளவுக்கு மெனக்கெடுவார் என்பதை கடந்தவருடம் அவர் நடிப்பில் வெளியான ‘6 மெழுகுவர்த்திகள்’ படம் நிரூபித்தது.. அவருக்கு நாலாபக்கமும் இருந்து பாராட்டுக்களை வாரி குவித்தது.

இப்போது மீண்டும் ஜனநாதன் இயக்கத்தில் ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மும்மூர்த்திகளில் ஒருவராக நடித்துவருகிறார் ஷாம். இன்று பிறந்தநாள் காணும் ஷாமுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.