நடிகர் பிரசன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுசி கணேசன் இயக்கிய ஃபைவ்ஸ்டார் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான பிரசன்னா தமிழில் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துவிட்டார். அழகிய தீயே படத்தில் ஒரு கதாநாயகனாக அவருக்கு பிரேக் கிடைக்க, திடீரென மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் மிரட்டலான வில்லனாக உருவெடுத்து தன்னால் எந்தவிதமான கேரக்டர் என்றாலும் துணிந்து நடிக்கமுடியும் என்று நிரூபித்தார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது சினேகாவுடன் காதல் மலர, கடந்தவருடம் அவரையே மனைவியாக கரம்பிடித்தார். தற்போது பிரசன்னா நடித்துள்ள கல்யாண சமையல் சாதம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதுதவிர நாகார்ஜுனா நடிக்கும் ‘பாய்’ என்ற படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தெலுங்கிலும் கால் பதித்துள்ள பிரசன்னா நீண்ட நாட்கள் வாழ, எல்லா வளமும் வெற்றியும் பெற Behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.