கவுண்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

99


கவுண்டமணி.. ரசிகர்களுக்கு செல்லமாக ‘கவுண்டர்’.. கிட்டத்தட்ட 40 வருடங்கள் தமிழ்சினிமாவை தனது நகைச்சுவையால் ஆளுமை செய்த நிகரில்லாத ஜாம்பவான். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இவர்போல களத்தில் இறங்கி அடித்த நகைச்சுவை நடிகன் யாரும் இல்லை..

ரஜினி, கமல், கார்த்திக் ஆகியோருக்கு நண்பனாக நடித்த அதே காலகட்டத்தில் விஜய், அஜீத், பிரசாந்த்… அவ்வளவு ஏன் அதற்கு அடுத்த தலைமுறையான சிம்பு என அடுத்த தலைமுறை இளம் நடிகர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு இணையாக ஆட்டம் போட்ட தலைமுறை இடைவெளி இல்லாத கலைஞன் தான் நம் கவுண்டர்.

குறிப்பாக தமது படங்களில் ஹீரோவுக்கு இணையாக கவுண்டமணியை துணைக்கு வைத்துக்கொண்டு மணிவண்ணன், பி.வாசு ,சுந்தர்.சி, குருதனபால், ரங்கநாதன், ஆகியோர் பல வருடங்கள் ஆடிய ருத்ரதாண்டவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது. இன்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக திரைப்படங்களில், தான் நடித்த நகைச்சுவை காட்சிகளால் பலரையும் மனம்விட்டு சிரிக்கவைக்கும் சேவையை தொடர்ந்து செய்துவருகிறார் கவுண்டமணி.

இன்று 74 வயதானாலும் ‘49-ஓ’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்றால் அது அவர் ஒருத்தருக்கு மட்டுமே கிடைத்துள்ள அற்புத வரம்.. இன்று பிறந்தநாள் காணும் நம் கவுண்டருக்கு நமது ‘behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.