கேரளாவில் இருந்து, வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர்தான் ஆண்ட்ரியா. ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விஸ்வரூபம்’ என கதாநாயகியோ அல்லது கெஸ்ட் ரோலோ அதில் தன் தனித்திறமையால் பளிச்சிடுபவர்.
பூர்வீகம் மலையாளம் என்றாலும் சமீபத்தில்தான் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார் ஆன்ட்ரியா. இந்தப் படம் ஆண்ட்ரியாவுக்கு மலையாளத்தில் நல்ல பெயரை பெற்றுத்தர, தொடர்ந்து பல மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆன்ட்ரியாவுக்கு.
‘கூகுள் கூகுள்’ பாடலை விஜய்யுடன் சேர்ந்து பாடி அசத்தியது இவரது ஹிட் லிஸ்ட்டில் நம்பர் ஒன். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை’ படத்தில்கூட தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா. இன்று பிறந்தநாள் காணும் ஆண்ட்ரியாவுக்கு, behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.