ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’

100

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கப்போகிறார், இதோ, அதோ என அவ்வப்போது செய்திகள் வெளியாகி அவற்றிற்கே போரடித்துப்போய் ஒதுங்கிப்போய்விட்டன. அதற்கேற்ற மாதிரி ஜீ.வி.பிரகாஷும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து ‘மதயானைக்கூட்டம்’ என்ற படத்தையும் துவங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பும் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சரி.. அவ்வளவுதான் நடிக்கும் ஆசையைத் தள்ளிவைத்துவிட்டார் என்று நினைத்தால் அது நம் தவறு. சார் ஹீரோவாக நடிப்பது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இயக்குனர் மணி நாகராஜும் ஜீ.வி.பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் இருவரும் சந்தித்துகொண்டபோது பென்சில் படத்தின் கதையை ஜீ.வி.பிரகாஷிடம் சொல்ல அது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. உடனே படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார்கள்.

இந்தப்படத்துக்கு இசையமைப்பதும் ஜீ.வி.பிரகாஷ் தான். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிப்பார் என தெரிகிறது. தற்போது அதர்வா, விக்ரம் பிரபு என இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ப்ரியா ஆனந்த். இவர்களுடன் ஒரு பலமான டெக்னிக்கல் டீமும் கைகோர்த்து களம் இறங்க இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.