இதற்கு முன்பு வண்ணத்துப்பூச்சி என்ற படத்தை எடுத்து பல விருதுகளையும் வாங்கியுள்ளார். ஆனாலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதை விட தன் படைப்புகள் தான் பேசப்படவேண்டும் என்று நினைப்பவர். ‘‘இளைஞர்கள் முன்பு பேசப்படும் வார்த்தைகள் அவர்களை எப்படி திசைமாற்றுகிறது என்பதை சொல்லும் படம் இது. அப்படிபட்ட இளைஞன் ஒரு கிராமத்தை மாற்றுகிறான் என்பதை காதலோடு கலந்து சொல்லியிருக்கிறேன்.’’ என்றார் ராசி.அழகப்பன்.
குகன் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இயக்குனரையும் தயாரிப்பாளரான டாக்டர் தி தேவநாதன்யாதவ், நிர்வாக தயாரிப்பாளர் குணசீலன் யாதவ் ஆகியோரை பாராட்டி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.