என்ன மாதிரியான மனிதர் இவர். பந்தா என்றால் “அது எப்படியிருக்கும்?, அது சரவணா ஸ்டோர்ஸ்லயா கிடைக்குது?” என கேள்வி கேட்கும் ஒரு வெள்ளந்தி மனிதராகத்தான் நமக்கு தெரிகிறார் அஜீத். சமீபத்தில் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பின்போது, “அவ்வளவு பெரிய ஸ்டாரான அஜீத், துளிகூட பந்தா இல்லாமல் அவர் கையால் எனக்கு பிரியாணி பரிமாறினார்” என்று காமெடி நடிகர் அப்புக்குட்டி போவோர் வருவோரிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.
இந்த செய்தியின் ஆச்சர்யத்தில் இருந்து விலகுவதற்குள்ளாகவே அடுத்து அஜீத் பற்றிய ஒரு இன்ப அதிர்ச்சியான தகவல். தனது வீடு மற்றும் தோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தன் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டிக் கொடுக்கிறார் அஜீத்.
இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு இடத்தை வாங்கிப் போட்டுள்ளார் அஜீத். இந்த இடத்தில் சமீபத்தில் தான் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. அஜீத் ஹைதராபாத்தில் இருந்தாலும் இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை அவரது மனைவி ஷாலினி முன்னின்று கவனித்துக்கொண்டார். விரைவில் கட்டடப்பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம் தன் பணியாளர்களுக்கு தனித்தனியாக வீடுகட்டிக்கொடுக்கும் அஜீத், அதை அவரவர் பெயரிலேயே பத்திரம் பதிந்தும் தரவும் ஏற்பாடு செய்துவிட்டாராம். அஜீத் இஸ் கிரேட். தல ‘தல’ தான்.