இத்தனை நாட்களும் ஓய்வு நேரங்களில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களோடு தனது அலுவலக மாடியில் மாலைநேரத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் கவுண்டமணி. இடையிடையே தன்னை சந்திக்கும் இயக்குனர்கள் சொல்லும் கதைகளை கேட்டு, அதில் சில கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்பந்தமும் போட்டிருக்கிறார் கவுண்டர். இப்படி ஒரே நேரத்தில் நான்கு படங்கள் தயாராக இருக்கின்றன.