1997ல் ஆக்ஷன் ஹீரோ சுரேஷ்கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான எவர்கிரீன் ஆக்ஷன் படம்தான் ‘லேலம்’. கமர்ஷியல் ஆக்ஷன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்டும் ஜோஷிதான் இந்தப்படத்தை இயக்கினார். இந்தப்படம் வெளியானபோது ‘படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளை மிஸ் பண்ணிவிடாதீர்கள்’ என விளம்பரம் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..
சூப்பர்ஹிட்டான இந்தப்படத்தின் கதையை, இப்போது பிரபல இயக்குனராக இருக்கின்ற ரெஞ்சி பணிக்கர் தான் எழுதியிருந்தார். இவரைப்பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் மலையாளத்தின் சூப்பர்ஹிட் படங்களான மம்முட்டி நடித்த ‘தி கிங்’ படத்திற்கும் சுரேஷ்கோபி நடித்த ‘கமிஷனர்’ படத்திற்கும் அவர்கள் இருவரும் பிறகு இணைந்து நடித்த ‘தி கிங் & கமிஷனர்’ படத்திற்கும் கதை எழுதியது இவர்தான்.
தற்போது ‘லேலம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரெஞ்சி பணிக்கர். ‘லேலம்’ படம் வெளியான சமயமே அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என பலர் கூறினார்கள். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது” என்கிறார் ரெஞ்சி பணிக்கர்.