தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கிய முதல்படம் ‘சக்கரக்கட்டி’. பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதன்பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பதுங்கியிருந்த கலாபிரபு இப்போது மீண்டும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார்.
தான் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கௌதம் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கலாபிரபு. இந்தப்படத்தையும் அவரது தந்தை தாணுவே தயாரிக்கிறார். இந்த வருட கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. ஆக்ஷனும் காமெடியும் சரிவிகிதத்தில் கலந்து தயாராகும் இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவாவில் படமாக்க இருக்கிறார் கலாபிரபு.