த்ரிஷ்யத்தை தொடர்ந்து ‘1983’..?

98

மலையாளத்தில் இருந்து சூப்பர்ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்யும் ட்ரெண்டில் ‘த்ரிஷ்யம்’ படத்தை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடித்திருக்கும் படம் ‘1983’. ‘நேரம்’ பட ஹீரோவான நிவின்பாலி நடித்த இந்த படம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருக்கும்.

இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படும் என நிவின் பாலியே அறிவித்திருக்கிறார். இதற்கிடையே இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தனக்கு திருப்தி இல்லையென்று நிவின் சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் வெளியானது. ஆனால் அதை உடனே மறுத்துள்ளார் நிவின்.

“இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து நடித்திருக்கிறேன்.. டைரக்டர் அப்ரிட் ஷைன் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் படமாக்கியிருக்கிறார். பத்திரிகையில் வந்த செய்தி தவறானது. இந்தப்படம் எனது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்” என தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘1983’ படம் பற்றிய விமர்சனத்தை படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்..

http://www.behindframes.com/movie-name-1983/

Leave A Reply

Your email address will not be published.