தனுஷை சுற்றிவளைத்த ரசிகர்கள்

88

கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. படப்பிடிப்பில் தனுஷும், கதாநாயகி அமிராவும் கலந்துகொண்டனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு அங்கிருந்த ரசிகர்கூட்டம் ஆட்டோகிராப் வாங்குவதற்காகவும் அவருடன் பேசுவதற்காகவும் தனுஷை சுற்றி வளைத்தது.

ஒரு வழியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தனுஷை மீட்டு, தடங்கலின்றி படப்பிடிப்பு நடக்க பாதுகாப்பு அளித்தனர். இதில் ஒரு காமெடி என்னவென்றால் இந்தக்காட்சியில் நடிப்பதற்காக சில துணை நடிகர்களும் போலீஸ் யூனிஃபார்மில் அங்கே நின்றிருந்ததுதான். இவர்களை போலீஸ் என்று நினைத்த பொதுமக்கள் சிலர், இவர்கள் ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர் என குறைபட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.