வீடுகளில் சிறுவயது பையன்களைக் குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தும் வார்த்தைதான் ‘பொடியன்’. சிலநேரங்களில் வளர்ந்த வாலிபனைக்கூட அவன் ஒன்றும் தெரியாதவன் என்று கிண்டல் பண்ணுவதற்கும் இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது உண்டு. உதயம் என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன், தான் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கும் ‘பொடியன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்.
இதில் பொடியனாக நடிப்பவர் ஜெய். இதை இயக்குனர் மணிமாறனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்தப்படம் பற்றி மணிமாறன் கூறும்போது, “பொதுவாக ஒருவனை அவன் பலம் தெரியாமல் குறைத்து மதிப்பிடுவதற்குத்தான் ‘பொடியன்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப்படம் வெளியாகும்போது அதற்கான அர்த்தமே வேறுவிதமாக மாறப்போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.